ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் பங்குனி கடைசி வெள்ளி கிழமைக்கு 7 நாட்களுக்கு முன்னதாக வெள்ளிக் கிழமை அன்று கொடியேற்றம் நிகழ்ச்சி இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோயிலில் வைத்து ந்டைபெறும், அங்கு ஊர் நாட்டாமை, பஞ்சாயத்து தலைவர், பொக்கிஷ்த்தார், காலாடி, ஊர் பெரியோர் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் நடைபெறும்.

அன்றிலிருந்து ஊர் மக்கள் கையில் மஞ்சள் காப்புக் கட்டி, முளைப்பாரியிட்டு விரதம் இருப்பர். தினமும் கலையில் நீராடி மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு புனித நீர் எடுத்து வந்து முளைப்பரிக்கு ஊற்றுவர், பின் இரவு முளைப்பாரியிட்ட பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி அம்மன் பாடல்கள் பாடி கும்மியடித்து முளைப்பாரியை வளர்ப்பர்.

கடைசி வெள்ளிக்கிழமை அன்று மாலையில் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவோர் அக்கினிசட்டி, ஆயிரம் கண் பானை, உருவம் எடுத்தல்,பால் குடம் எடுத்தல், மொட்டையிடுதல், பூமுடி கொடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் அதன் பின் இரவு 11 மணிக்கு மேல் ஊர் மக்கள் அனைவரும் மேளதாளம் முழங்க ஒன்றுகூடி பொங்கள் வைக்கச் செல்வர். கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் பானையில் நீர் நிறப்பி வந்து ஒரே நேரத்தில் தீயிட்டு பொங்கல் வைப்பர். பொங்கல் வைத்துக்கொண்டிருக்கும் போதே வீட்டில் உள்ள ஆண்கள் மற்றும் குழந்தைகள் அம்மனை வழிபடச் செல்வர். பொங்கலிட்டு முடிந்ததும், அம்மனுக்கு மாவிளக்கு எடுத்துச் செல்வர். ஊர் பெண்கள் அனைவரும் மாவிளக்கு எடுத்து இரவில் கோயிலைச் சுற்றிவரும் நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சியாகும். அதன் பின்னர் கோயிலின் முன்னால் இருபுறமும் வரிசையாய் வைத்து மேளம் அடிப்பர் ப்ப்போது மக்கள் அருள் வந்து ஆடி அருள்வாக்கு சொல்வர். அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு பொங்கல் நிகழ்ச்சி நிறைவு பெறும்.

சனிக்கிழமை மாலை 3 மணிக்கு மேல் முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறும், மேளதாளம் மற்றும் தாரை தப்பட்டை முழங்க இளைஞர் பட்டாளம் ஆடிக்கொண்டே முன்னே செல்ல பின்னால் அம்மன், குறவன் குறத்தி, கரகாட்டம் மற்றும் சாமி வேடம் அணிந்து இரண்டு டிராக்டர்களில் மேல் அமர்ந்து அதன் பின்னர் முளைப்பாரி ஊர்வலமாய் வரும். இந்நிகழ்ச்சி இருக்கண்குடி தேவேந்திரகுல திருமண மண்டபத்தில் இருந்து பெருமாள் கோவில் வழியாக வந்து, பேருந்து நிலையம் வழியாக காளியம்மன் கோவிலை சுற்றி வலம் வந்து மாரியம்மன் திருக்கோயிலுக்கு வருவர், அதுவரை மேளதாளம் மற்றும் தாரை தப்பட்டை முழங்க இளைஞர் பட்டாளம் ஆடிக்கொண்டே முன்னே செல்லவர். பின் கோயிலில் முளைப்பாரியை வைத்து கும்மியடிப்பர், இந் நிகழ்ச்சி முடிந்ததும் முளைப்பாரியை ஆற்றில் சென்று கரைத்து விடுவர்.

மறுநாள் முளைப்பரி எடுத்த பெண்கள் அனைவரும் நீராடி கோவிலுக்குச் சென்று புனித நீரால் அபிசேகம் நடைபெறும், இத்துடன் இந்நிகழ்ச்சி நிறைவுபெறும்.

இருக்கண்குடி பங்குனி பொங்கல் விழா புகைப்படங்கள்

Advertisements