தெக்குப்பட்டி அருள்மிகு ஸ்ரீபுதியவராஜா திருக்கோவில்
புண்ணிய ஸ்தல வரலாறு
இருக்கண்குடி

ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணம் சசிவர்ணம் சதர்புஷம் பிரசண்ணவதணம்
தியாகே விக்ணோப சாந்தி

ஓம் நம சிவாய
ஸெளராஷ்ட்ரே ஸோமநாதஞ் ஸ்ரீசைலே மல்லிகார்ஜீனம்
ஊஜ்ஜய்ன்யாம் மகாகாளம் ஓங்காரம் அமலேஷ்வரம்
பரல்யாம் வைத்தியநதஞ்ச டாகின்யாம் பீமசங்கரம்
ஸேதுபந்தேது ராமேஷம் நாகேஷம் தாருகாவனே
வாரணாஷ்யம்து விஷ்கேவஷம் த்ரயம்பகம் கெளதமிதடே
இமாலயேது கேதாரம் குஷ்ணேஷம் சிவாலயே

ஆய்வாளர் : பெ.மாரிச்செல்வம் இ.க.தமிழ்

தகவல்
1.பெ.பழனிமுருகராஜா
2.ஜெ.குருசாமி
3.வ.இருளப்பராஜா
4.க.மாரிமுத்து

ஊரும் சிறப்பும்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் இருக்கண்குடி. இந்த ஊர் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது, அதில் ஒன்று, மாரியம்மன் இவ்வூரில் குடி கொண்டு இருப்பது. அதனால் மக்கள் அனைவரும் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் என்று தான் அழைக்கின்றனர். கோயில் வழிபாட்டுத் தலங்களில் இது சிறப்பு மிக்க ஊராகத் திகழ்கிறது.

கோயில் அமைப்பு

இருக்கண்குடியில் பாயக் கூடிய நதிகளான வடக்கே அர்ச்சுனா நதியும், தெற்க்கே வைப்பறு நதியும் அமைந்துள்ளன. இந்த இரண்டு நதிகளும் ஒன்று சேரும் இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இக்கோயில் ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோயில் 40 அடி நீளமும், 20 அடி அகலமும் கொண்டு செவ்வக வடிவில் வேப்பமரம், பனைமரம், பெரிய இச்சி மரங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

அர்ச்சுனா நதி பெயர்க்காரணம்

இக்கோயிலின் வடக்கே தவழக் கூடிய அர்ச்சுனா நதி மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ள வத்திராயிருப்புப் பகுதியில் உற்பத்தியாகிறது.

” முன் காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் கடுகளில் திரிந்து கொண்டு இம்மலையடிவாரத்திற்க்கு வந்த போது நீராடுவதற்கு இடம் இல்லாமையால் அர்ச்சுனன் கங்கையை வணங்கி வருணக் கருணையால் பூமியைப் பிளந்தான். அப்பிளவிலிருந்து தோன்றி பெறுக்கெடுத்த இவ்வாற்றில் பஞ்ச பாண்டவர்கள் திரெளபதியுடன் நீராடி மகிழ்ந்தனர். இவ்வாறு தோன்றிய ஆறே அர்ச்சுனன் ஆறு என்று பெயர் பெறுவதாயிற்று”

வைப்பறு பெயர்க் காரணம்

தெற்கே தவழக் கூடிய வைப்பாறு, பொதியமலையின் அடிவாரத்தில் சிவசைலத்துக்கு வடபுறம் சம்புகன் என்ற வேடன் தீயின் நடுவிலிருந்து கடுந்தவம் புரிந்தான். அதனால் அயோத்தியில் பிராமணப் பிள்ளை ஒருவன் இறந்து போனான். இப்போது அயோத்தி மன்னனாக இருத்த இராமன் சேனைகள் படைசூழ வந்து சம்புகளைக் கொன்ற பாவத்தால் பிடிக்கப் பெற்ற இராமன், பாவ விமோசனத்திற்காக சிவமலையில் சிவபெறுமானை நிலை நிறுத்தி வணங்கி தவம் செய்து பாவ விமோசனம் பெற்றான். அதன் பின் இராமன் தன் பரிவாரத்துடன் புளியவனமாக இருந்த புளியங்குடி வாசுதேவ நல்லூர்களுக்கு இடையே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையினை வந்து அடைத்தான். உடனிருந்த சாம்பவன் அவ்விடத்திலுள்ள புண்ணியத் தீர்த்தங்கள் கலந்த நீக்குடத்தை அகத்திய மாமுனிவர் புதைத்து வைத்திருக்கும் விபரத்தை கூறி அம்பெய்து அக்குடத்தை உடைக்க ஆறு தோன்றியது. புதையிலிருந்து ஆறு தோன்றியதால் அது வைப்பாறு என்று பெயர் பெற்றது. இவ் ஆறு கிரிவலம் வந்த நல்லூர், சாத்தூர், கொல்லபட்டி வழியாகப் பாய்ந்து இருக்கண்குடியை வந்து அடந்து அர்ச்சுனா நதியுடன் கலந்து முத்துலாபுரம் விளாத்திகுளம் வழியாகச் சென்று கடலில் கலக்கின்றது. இது புண்ணியத் தீர்த்தங்களில் ஒன்று.

கோயில் வரலாறு

தக்கா புக்கா என்ற இருளப்பன் எருக்களங்குடி ஊர்த் தலைவராக இருந்தார். ஊர் மிகவும் பசுமையாக இருந்தது. அதனால் ஆடு, மாடுகளை வளர்க்கக் கூடிய பக்கத்து ஊர் மக்கள், மேய்ச்சலைத் தேடி எருக்களங்குடியை நோக்கி வந்தனர்.

சில நாட்கள் கழித்து தக்கா புக்கா அவர்களுக்கு 21 பந்தி 61 சேனைகளைக் கொண்ட தெய்வத்தை நீ வழிபட்டால் உனக்கு, சகல பாக்கியங்கள் கிடைக்கும் என்று அசரீயை ஒலித்தது. அந்த அசரீயை கூறிய கோயிலானது சாத்துரில் இருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் சிவலிங்கபுரம் என்ற மீனாட்சிபுரத்தில் அமைந்து இருந்தது, இவர் அங்கு சென்று வழிபாடு செய்யும் வழக்கத்தைக் கொண்டு இருந்தார். பின்னர் தன்னால் இவ்வளவு தூரம்
சென்று வர இயலாது எண்று நினைத்து அங்கிருந்து பிடிமண் எடுத்து வந்து எருக்களங்குடியில் வைத்து புதியவரஜாவை வனங்கினார். அதன் வாயிலாக எருக்களங்குடி ஊர் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அன்ற்றைய காலகாட்டதில் அவை பேசக் கூடிய தெய்வமாக இருந்தது.பின்னர் நடக்கக் கூடிய தீமைகழளை மக்களிடம் கூறி மக்களைக் காத்து வந்தனர். புதியவராஜா கோவிலுகும், மாரியம்மன் கோயிலுக்கும் இடையே தெய்வ தொடர்புகள் இருப்பதாகக் கருதுகின்றனர். ஏனென்றால் இக்கோயில் அமைந்த பின்னர் தான் மாரியம்மன் மண்ணில் புதைந்து இருக்கும் செய்தி தக்கா புக்கா , மகள் வள்ளி என்பவள் மூலம் அரியலாகிறது. வள்ளி சாணங்க்ளைப் பொருக்குவதர்காக தன்னுடய கூடையை எடுத்துக் கொண்டு ஆறுகள் இரண்டும் ஒன்று சேரும் இடத்திற்கு வந்து தன் குடையயை ஒர் இடத்தில் வைத்துவிட்டு சாணத்தைப் பொறுக்கிப் போட்டாள். அவள் கூடையை மட்டும் யாராலும் தூக்க முடியவில்லை. அப்போது வள்ளியின் மீதுன மாரியம்மன் இறங்கி ஆடி, என் பெயர் மாரியம்மன் என்றும் இந்த மண்ணுள் புதைந்து இருபதாகவும் தன்னை வணங்கினால் உயிர்களைக் காப்பேன் என்றும் உறுதி அளித்தாள். வள்ளி கொஞச்ம் மனநலம் பாதிக்கப்பட்டவள் என்பதால் அவளை மாரியம்மன் தனக்குரிய பலியாக ஏற்றுக் கொண்டாள் எனக் கூறுகிறார் தகவலளி.

(க.மாரிமுத்து ஆண், வயது 45, 05.01.2014 )

புதியவரஜா கோயில் முதலில் பெரிகொல்லப்பட்டி என்ற ஊரில் இருந்தது. இருக்கங்குடியை சேர்ந்த மக்கள் சிலர் அங்கு சென்று சாமியை வணங்குவதை வ ழகமாகக் கொண்டு இருந்தனர். அந்த ஊரில் பலர் இருப்பதைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். இக்கோயிலில் பூசை செய்யக் கூடியவர்கள் தேவேந்திர குலத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்கள் மீதுதான் சாமி இறங்கி ஆடும் அன்றய காலகட்டதில் ஆதிக்க சாமியினர் என்று சொல்லக்குடிய மணியாறு என்ற வகயைச் சார்ந்த தேவர் இனத்தைச் சேர்ந்தவர்கள், “தேவேந்திரகுலத்தைச் சேர்ந்தவர்கள் பூசை வைத்து நாம் சாமி கும்பிடவா”! என்று நினைத்து கொயிலில் கலவரத்தை உண்டு பண்ணினர். அதனால் அங்கிருந்து இருக்கங்குடியைச் சேர்ந்த தேவேந்திர குல மக்கள் பிடிமன் எடுத்து வந்து இருக்கங்குடியில் வைத்து வணங்க ஆரம்பித்தனர் என்று கூருகிறார் தகவலளி.

(மா.வடிவேல், ஆண், வயது 58, 04.02.2014)

ஊர்ப் பெயர்க் கரணம்

இருக்கங்குடி அன்றைய காலகட்டத்தில் எருக்களங்குடி என்று தான் அழைக்கப்பட்டது. ஏனென்றல் எருக்களஞ்செடிகள் அதிகமாக இருந்த காரணத்தால் அவ்வாறு அழைக்கப்பட்டது. ஆனால் சிலர் இருகங்கை இருப்பதால் இவ்விடம் இருகங்கைக்குடி என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றனர்.
எருக்களங்குடி மக்கள், மாரியம்மனை பூமியில் இருந்து எடுத்து சிலையை வெட்ட வெளியில் வைத்து வணங்கி வந்தனர். இந்த மாரியம்மனின் அருள் பல மக்களுக்குக் கிடைத்தது. இதனை அறிந்த ராணி மங்கம்மாள் மாரியம்மன் கோயிலை மண்ணால் கட்டிக் கொடுத்தாள். இக்கோயிலைக் கண்டு பிடித்தவர் யார்? என்று கேட்ட போது அங்கிருந்த மக்கள் தக்கா புக்கா என்ற இருளப்பன் என்று கூறினர். ரானி மங்கம்மாள் அவரை அழைத்து செம்புப் பட்டயம் ஒன்றை வழங்கினாள். அதில் தக்கா புக்கா இருளப்பன் மற்றும் அவர்களுடைய பங்காளிகளுக்கும், இருக்கன்குடி மக்களுக்கும் இக்க்கோயில் பாதியப்பட்டது என்று எழுதி இருந்தது. அப்போது ராணி மங்கம்மாள், எருக்களங்குடி என்று அழைக்கப்பட்ட ஊரை, இருக்கங்குடி என்று வழங்கி சிறப்பித்தார். இவை காலப் போக்கில் மருவி இருக்கங்குடி என பெயர் பெற்று இன்று வரை அப்பெயரில் வழங்கப்பட்டு வருகின்றது.

இலுப்பை மரங்கள் அதிகமாக இருந்த கரணத்தால் இருக்கன்குடி எனவும் இப்பெயர் வழங்கி இருக்கலாம் எங்கிறார் தகவலளி.

(க.மாரிமுத்து, ஆண், வயது 45, 07.11.2013)

புதியவரஜா

இக்கோயில் ஏழு ராஜா தெய்வங்கள் உள்ளன. அவற்றில் இவர் தான் மூத்தராஜா. இவருக்கு அடுத்த படியாக இருப்பவர்கள் இவரது தம்பிகள் ஆவார். இந்த ஏழு ராஜாக்களில் மூத்த ராஜாவான புதியவராஜாவின் சிறப்புகள் ஆவார். இந்த ஏழு ராஜாக்களில் மூத்த ராஜாவான புதியவராஜாவின் சிறப்புக்களை மட்டும் தகவலாளி கூறுகின்றார். ஏன் என்று கேட்கும் போது அந்த ராஜாக்கள் பற்றி என் முன்னோர்கள் எனக்குக் கூறவில்லை என்கிறார்.

புதியவராஜா என்பவர் அனைத்து தெய்வங்களும் ராஜாவாக இருக்கின்றார். இவர் ஒரு சைவசாமி என்பதால் இவர் மிகவும் சுத்தமான இடத்தில் மட்டுமே இருப்பார். கிழக்கு திசையைப் பார்த்தவாறு அமர்த்து இருக்கிறார். அசுத்தமான இடங்களில் இவர் இருப்பதில்லை. இவரின் காவல் தெய்வங்களான செங்காட்டு இருளப்பசாமி, பொன்மாடசாமி, நொண்டி மாடசாமி, வைரவன் மற்றும் அக்னி இருளப்பசாமி அனைவரும் காவு வாங்கச் செல்லும் போது புதியவராஜா இவர்களுக்குத் திருநீறு பூசிவிடுவார். ஏனென்றால் இவர்கள் காவு வாங்கும் போது கெட்ட ஆவிகள் மற்றும் முனியசாமி இவர்களைத் தடுத்து நிறுத்தக்கூடும். அதனால் புதியவராஜா திருநீறு பூசினால் அவர்கள் கட்டுப்படுவார்கள். பூசைப்பானையைக் கொண்டு வந்து விட்டால் புதியவராஜாவிற்க்குச் சக்திகள் அதிகமாகும். அதன் காரணமாகத்தான் தீயசக்திகள் இவ் வேலையைச் செய்கின்றன எனத் தகவலாளி கூறுகிறார்.

(ஜெ. குருசாமி, ஆண், வயது 40,10.02.2014)

பெருமாள்சாமி

இவர் கிழக்கு நோக்கி அமர்ந்து இருப்பார். இவர் ஒரு பெருந்தெய்வம். இவர் இருந்தால் தான் புதியவராஜா கோயில் கொடையானது எந்த ஒரு தடங்களும் இல்லாமல் நடைபெறும். இவர் ஒரு பெருந்தெய்வம் என்பதால் இவருக்கு அனைத்து தெய்வங்களும் கட்டுப்படும். ஏன்? இவ்வுலகத்தை ஆட்டிப் படைக்கும் ஈசனாகிய முனியனே கட்டுப்படுவார். பொன் மாடசாமி, பெருமாள்சாமி இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த ஊரைக் காப்பாற்றுவோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டதன் வாயிலாக இன்று புதியவராஜா சன்னதியில் பெருமாள்சாமி நிலை கொண்டுள்ளார்.
(கு. புஷ்பலதா, பெண் வயது 35, 20.2.2014)

செங்காட்டு இருளப்பசாமி

இவர் இருக்கண்குடி வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு காவல் தெய்வமாக விளங்கி வருகின்றார். இவரை நாடிவரும் மக்களுக்கு கேட்ட வரத்தினை அளிக்கும் வள்ளலாக இருக்கின்றார். இவரிடம் அதிகமானோர் குழந்தை வரம் கேட்டுத்தான் வந்துள்ளனர். அவ்வாறு வந்த அனைத்து பக்தர்களுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இருளப்பனின் அருளால் பிறந்தமையால் அந்த குழந்தைக்கு ‘இருளப்பசாமி’ என்று பெயர் வைத்துள்ளனர்.

அதை போல அழகான பெண்களை இவர் ஆண்டு கொள்வார். பின்னர் ‘நான்தான் இருளப்பன் என்று கூறி இந்தப்பெண்ணுக்கு நல்ல சுகத்தைக் கொடுப்பேன். எனக்கு நீங்கள் நல்லா கூவக்கூடிய சேவல் ஒன்றும் சாராயமும் கொடுக்க வேண்டும்’. என்று தனக்குத் தேவையான பொருள்களைக் கேட்டு பெற்றுக் கொள்வார்.

குழந்தைகளையோ, பெரியவர்களையோ தீய சக்திகள் மற்றும் கெட்ட ஆவிகள் ஏதேனும் ஒன்று அச்சப்படுத்தி இருந்தால் அவர்கள் இத் தெய்வத்திடம் செல்வார்கள் அங்கு அவர்களுக்குத் திருநீறு போட்டு தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்வர்.

சின்னத்தம்பி என்பவர் தன்னுடைய காட்டில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. இவர் மழைக்கு ஒதுங்குவதர்க்காக அருகில் உள்ள புளிய மரத்தின் கீழ் உட்கார்ந்து இருந்தார். அப்போது அவர் மீது இடி விழுந்து இறந்து போனார். இவரைக் காப்பாற்ற இருளப்பசாமி சென்றார்.

ஆனால் முடியவில்லை அதற்குப் பிறகு சென்னத்தம்பியின் உடலை வீட்டிற்க்கு எடுத்துசென்ற போது அவருடைய வீட்டில் இருளப்பன் தங்கிக் கொண்டார். இதனை அறிந்த சின்னத்தம்ப் வீட்டார்கள் சாமியை அடைத்துக் கொண்டு செல்வதில் வல்லவர்களான பட்டுநூல்செட்டி என்ற இனத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து வந்து இருளப்பசாமியைப் பச்சக் குடத்தில் (சுடப்படாத மண்பானை) அடைத்து கொண்டு தெருவின் நடுப்பகுதிக்கு வரும் போது ‘ஏய் நான் இருளப்பன், டா, என்னை நீ அடைத்துக் கொண்டு போக முடியுமா?’ என்று கூறினார். அப்போது மண்பானை இரண்டாக பிளந்தது. இருளப்பசாமியும் அங்கேயே நிலை கொண்டார்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் சிவகங்கை ஜில்லா கொல்லபட்டி ஜமீன் ஆளுகைக்குட்பட்டது தெக்குப்பட்டி கிராமம். அங்கு அமையப்பெற்றது தான் ஸ்ரீபுதியவராஜா திருக்கோவில். இக்கிராமத்தில் பல இன மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். சில குடும்பர்(பள்ளன்) இன மக்களும் வாழ்ந்து வந்துள்ளனர்.

இத்திருக்கோவிலில் 21 தெய்வங்கள் உள்ளன. இவற்றில் 7 தெய்வம் ராஜாவாகவும் 4 தெய்வங்கள் அம்மாவாகவும் 2 தெய்வங்கள் மந்திரிகளாகவும் 8 தெய்வங்கள் காவல்காரர்களாகவும் அமையப்பெற்றுள்ளது.

திருக்கோவிலில் திருவிழாகாலங்களில் கொல்லபட்டியில் உள்ள முதற்படி சந்நதியிலிருந்து ஆராதணை ஆரம்பித்து தெக்குப்பட்டியில் உள்ள கோவிலுக்கு சாமி ஆட்டம் ஆடி சென்றுள்ளனர். பின்பு அத்திருக்கோவிலில் பொங்கல் வத்து ஆராதணை செய்து பொங்கல் பாணையை ராஜா தெய்வத்தின் தலையில் வைத்து காவல் தெய்வங்கள் காவலில் முதற்படி கோவிலுக்கு கொண்டுசெல்வார்கள். இவ்வாறு திருவிழா நடைபறும்.

இதில் காவல் தெய்வங்கள் ஆடுபவர்கள் குடும்பர் இன மக்கள் ராஜா தெய்வங்கள் ஆடுபவர்கள் ஜமீன்தரர்கள். குடும்பர் இன மக்களின் காவலில் நாம் வரக்கூடாதென்ற இலிவான என்னம் கொண்டு குடம்பர் இன மக்கள் சாமி கும்பிட வருவதை தடுத்துவிட்டனர். இதை தெய்வத்திடம் முறையிட்டு கும்பிட்டு நீங்கள் எங்களுடன் வந்துவிடவேண்டுமென்று கூறி பிடி மண்ணை எடுத்துக்கொண்டு தெக்குபட்டி கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்

தெக்குப்பட்டியிலிருந்து வெளியேறி கிழக்குநோக்கி நகர்ந்து வந்து ஓர் இடத்தை தேர்வு செய்து அங்கே கோவில் கட்டி அங்கேயே குடில்கள் அதிகமாக இருந்ததால் அப்பெயர் பெற்றது இதுவே தற்கால இருக்கண்குடி

பின்பு வசதியின் காரணமாக அவைகள் மேற்கு நோக்கி வந்து தங்கினர் அங்கு சில குடும்பர் இன மக்களும் ஒரு வேளார் மணையும் ஒரு ஆசாரி மணையும் ஏற்கனவே இருந்தது, அவர்களுடன் இவர்களும் இணைந்து வசித்துள்ளனர்.

தற்பொழுது இருக்கண்குடியில் அமைந்துள்ள கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் கடைசி வெள்ளி அன்று இரவு முழுவதும் ஆராதணை நடைபெரும்.

தெய்வங்களின் பெயர்கள்:
1.புதியவராஜா
2. வெள்ளையராஜா
3. சின்னத்தம்பிராஜா
4. சுந்தரராஜா
5. நீலமேகராஜா
6. வனராஜா
7. சீதாராமராஜா
8. இளையபெருமாள்
9. ராஜகாளியம்மன்
10. மந்திர மூர்த்தி
11. பேச்சியம்மன்
12. ராக்காச்சியம்மன்
13. பாதாளகண்டி
14. அக்னி இருளப்பசாமி
15. மதுரை வீரன்
16. மாசாணமுத்து
17. பாதாள ராக்கு
18. வைரவன்
19. கழுங்கடியான்
20. பொன் மாடசாமி
21. செங்காட்டு இருளப்பசாமி

இத்துடன் நொண்டி மாடசாமி, சின்னத்தம்பி கிழவனுக்கும் பல்லயம் அளிக்கப்படும்.

தெய்வங்களின் சிறப்புகள் :
1. புதியவராஜா
புதியவராஜா தான் கோவிலின் தலைமை ராஜா. இவர் சைவமாக அமர்ந்துள்ளார். இவர் மலையாலம் பேசக்கூடிய கேரளாவில் வாசம் செய்கின்றார். உலகிலுள்ள அத்துனை ராஜாகளுக்கும் இவரே தலையாயவர். இவர் எப்பொழுதும் தங்க தொட்டிலில் தான் அமர்ந்திருப்பார்.

2. வெள்ளையராஜா
வெள்ளையராஜா இரண்டாவது ராஜா. இவர் சைவமாக அமர்ந்துள்ளார். இவருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது, அதாவது பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது ஆகையால் இவருடைய சிறப்பு தெரியவில்லை.

3. சின்னத்தம்பிராஜா
சின்னத்தம்பிராஜா மூன்றாவது ராஜா. இவர் சைவமாக அமர்ந்துள்ளார். இவருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது, அதாவது பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது ஆகையால் இவருடைய சிறப்பு தெரியவில்லை.

4. சுந்தரராஜா
சுந்தரராஜா நான்காவது ராஜா. இவர் சைவமாக அமர்ந்துள்ளார். இவருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது, அதாவது பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது ஆகையால் இவருடைய சிறப்பு தெரியவில்லை.

5. நீலமேகராஜா
நீலமேகராஜா ஐந்தாவது ராஜா. இவர் சைவமாக அமர்ந்துள்ளார். இவருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது, அதாவது பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது ஆகையால் இவருடைய சிறப்பு தெரியவில்லை.

6. வனராஜா
வனராஜா ஆறாவது ராஜா. இவர் சைவமாக அமர்ந்துள்ளார். இவருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது, அதாவது பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது ஆகையால் இவருடைய சிறப்பு தெரியவில்லை.

7. சீதாராமராஜா
சீதாராமராஜா ஏழாவது மற்றும் கடைசி ராஜா. இவர் சைவமாக அமர்ந்துள்ளார். இவருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது, அதாவது பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது ஆகையால் இவருடைய சிறப்பு தெரியவில்லை.

8. இளையபெருமாள்
இளையபெருமாள் மந்திரியாக அமர்ந்துள்ளார், இவரும் சைவமாக அமர்ந்துள்ளார். இவருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது, அதாவது பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது ஆகையால் இவருடைய சிறப்பு தெரியவில்லை.

9. ராஜகாளியம்மன்
ராஜகாளியம்மன் சைவமாக அமர்ந்துள்ளார். காளியம்மன் வேறு எங்கும் சைவமாக இல்லை.

10. மந்திர மூர்த்தி

11. பேச்சியம்மன் 12. ராக்காச்சியம்மன்

13. பாதாள கண்டி

14. அக்னி இருளப்பசாமி

15. மதுரை வீரன்

16. மாசாணமுத்து

17. பாதாள ராக்கு

18. வைரவன்

19. கழுங்கடியான்

20. பொன் மாடசாமி

21. செங்காட்டு இருளப்பசாமி

22. சின்னத்தம்பி தாத்தா

ஆராதணை முறைகள் :
இத்திருக்கோவிலில் வருட ஆராதணை முறை பின்பற்றப்படுகிறது, அதாவது வருடத்திற்க்கு ஒருமுறை மட்டும் ஆராதனை நடக்கும்.

வைகாசி மாதம் கடைசி வெள்ளி அன்று கோவிலில் கொடை விழா நடைபெறுவதற்க்கு எட்டு தினங்களுக்கு முன்பு ஆராதணை நடத்தி கொடி ஏற்றப்படும். பின்பு ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்படும். அவர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை திறம்பட செய்து முடிப்பர்.

கொடி ஏற்றிய எட்டாவது நாள் வெள்ளி அன்று இரவு 8.00 மணிக்கு மேல் விநாயகருக்கு ஒரு தேங்காய் விடலையும் ஒரு சூடமும் அளிக்கப்படும். பின்பு முதற்படி கோவிலில் முதல் மரியாதையாக சூடம் ஏற்றப்படும். அதன் தொடர்ச்சியாக கொடி அழைத்தல் (சாமி இருக்கும் மேற்கு திசையை நோக்கி தேங்காய் உடைத்து சாமிகளை அழைத்தல்) நடைபெறும். அடுத்தபடியாக சாமிக்கு அலங்காரம் செய்து ஆராதணை நடத்தி சாமியாட்டம் ஆடும், மருளாடிகளுக்கு சந்தனும் குங்குமம் வைத்து மேளம் தட்டி அருள் ஏற்றப்படும். பின்பு புதியவராஜா சாமியிடம் அருள் பெற்று காவல் தெய்வங்கள் வைரவனும் இருளப்பசாமியும் ஊர் சுற்றி வரும்போது அக்னி இருளப்பசாமி மட்டும் ராஜாவிற்க்கு காவல் இருப்பர். இதன் தொடர்ச்சியாக ஆசாணம் என்றழைக்கப்படும் எல்லை தெய்வத்திற்க்கு ஒரு தேங்காய் பழம் மாலை அளிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக இரவு 11.00 மணிக்கு மேல் காட்டிற்குள் இருக்கும் கோவிலுக்கு செல்வார்கள்.

அங்கு சென்று முதலில் ஒரு சேவல் தோரண காவு கொடுக்கப்படும். அடுத்து வாழைமரம் நட்டப்படும். அதன் தொடர்ச்சியாக மீண்டும் கொடி அழைத்து சாமிகளுக்கு அலங்காரம் செய்து பொங்கல் வைக்க தண்ணீர் எடுக்க நதிக்குச் சென்று பொங்கல் பாணைகளுக்கு சந்தனம் குங்குமம் வைத்து ஆராதணை நடத்தி பொதுப்பாணையை புதியவராஜாவின் தலையில் வைத்து பாணையை கொண்டுவந்து பொங்கள் வைக்கப்படும். பொங்கல் வைக்கும் போது ஒரு தேங்காய் உடைத்து ஒரு ஆராதணை நடத்தி பின்பு பொங்கல் முடித்த பின் தலுகை (பொங்கல்) வைத்து ஒரு ஆராதணை நடத்தபடும்.

அதன் தொடர்ச்சியாக காளியம்மனுக்கு சைவ காவு கொடுக்கப்படும். அப்பொழுது அம்மனுக்கு தனி அலங்காரம் செய்யப்படும். அப்பொழுது அம்மனுக்கு தனி அலங்காரம் செய்யப்படும். அடுத்தபடியாக அக்னி இருளப்பசாமியின் தலைமையில் அக்னி இருளப்பசாமி மதுரை வீரன் மாசாண முத்து வைரவன், கழுங்கடியான், பொன் மாடசாமி, நொண்டி மாடசாமி, செங்காட்டு இருளப்பசாமி என அனைத்து சாமிகளுக்கும் அசைவ காவும் அருந்த மதுவும் கொடுத்து பசியமர்த்தப்படும். அப்போது புதியவராஜா அக்னி இருளப்பசாமி, மதுரை வீரன், மாசாண முத்து, வைரவன், கழுங்கடியான், பொன் மாடசாமி, நொண்டி மாடசாமி, செங்காட்டு இருளப்பசாமி என அனைத்து சாமிகளும் மக்களுக்கு அருள்வாக்கு அளிப்பார்கள். அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு தேங்காய் உடைத்து ஒரு ஆராதணை நடத்தப்படும். அதன் பின்பு பொங்கல் பாணை புதியவராஜாவின் தலையில் தூக்கி விடப்படும். தொடர்ச்சியாக ஒரு செம்மறி ஆட்டுக்கிடாய் வடக்கு வாசலில் வெட்டப்படும். பின்பு பொங்கல் பாணை புதியவராஜாவின் சக்தியால் ஊரில் அமைந்துள்ள முதற்படி கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு மஞ்சள் நீராட்டு முடித்து முதற்படிக்கோவிலில் மீண்டும் ஒரு தேங்காய் உடைத்து ஆராதனை செய்யப்படும். பின்பு படிமார்த்ததாரர்களுக்காக பிரசாதம் வழங்கி கொடை திருவிழா நிறைவுபெரும்.

எட்டு நாள்கள் கழித்து ராஜாவிடம் ஒரு பொங்கல் வைத்து திருவிழா தடை நீக்கப்படும்.

ஆய்வாளர் : பெ.மாரிச்செல்வம் இ.க.தமிழ்

தகவல் : 1. பெ.பழனிமுருகராஜா
2. வ.இருளப்பராஜா
3. ஜெ.குருசாமி
4. க.மாரிமுத்து

Advertisements